தேசிய செய்திகள்

கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது-கெஜ்ரிவால் + "||" + adequate number of police personnel will be deployed as required ;

கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது-கெஜ்ரிவால்

கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது-கெஜ்ரிவால்
தேவைக்கேற்ப கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்   துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது ; - “ வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்.  உள்துறை அமைச்சர் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார். இது நேர்மறையான ஒன்றாகும்.  டெல்லியில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவெடுத்துள்ளோம்” என்றார். 

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் கேட்கப்படுமா? என்று கேட்ட போது, “ தேவைப்பட்டால், நடக்கும் என நம்புகிறேன். ஆனால் தற்போது, காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சிக்கிம் விவகாரம்: டெல்லி அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரம்; திரும்ப பெறப்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்
சிக்கிம் தனி நாடு என்று டெல்லி அரசு சா்ரபில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2. டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை - முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4. டெல்லியில் கடந்த வாரத்தை விட கொரோனா பரவல் சற்று குறைந்தது - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கடந்த வாரத்தை விட கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கையூட்டுகிறது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.