நமஸ்தே டிரம்ப் உரையில் டொனால்டு டிரம்பின் சூ-சின்- வீரோட் உச்சரிப்பு வைரலாகி உள்ளது


நமஸ்தே டிரம்ப் உரையில் டொனால்டு டிரம்பின்  சூ-சின்- வீரோட்  உச்சரிப்பு வைரலாகி உள்ளது
x
தினத்தந்தி 25 Feb 2020 10:58 AM GMT (Updated: 25 Feb 2020 11:58 AM GMT)

'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கரின் பெயரை தவறாக உச்சரித்ததற்காக டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் சரமாரியாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

புதுடெல்லி

இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொன்ல்டு டிரம்ப்   இந்தியா வந்தார். அதன்பின் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா மைதானத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  உரையாற்றினார்.

அந்த உரையின் போது  கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் சச்சின் தெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை இந்தியர்கள் தான் என்று பெருமைப்படுத்தினார். இருப்பினும்,  சச்சின் தெண்டுல்கர் பெயரை  ‘சூ-சின்’ என்றும், விராட் கோலி பெயரை வீரோட்’ என்றும் உச்சரித்தார். சச்சின் பெயரை மட்டுமின்றி தத்துவ ஞானி சுவாமி விவேகானந்தர் பெயரையும் டிரம்ப் தவறாக உச்சரித்தார்.

இதனை சமூக வலைதளவாசிகள்  பலரும் கேலி செய்து வருகின்றனர்.

உலகின் பலராலும் சச்சின் பெயரை எளிதாக உச்சரிக்கும் போது அமெரிக்க அதிபர் அவரது பெயரை சூ சின் என்று உச்சரித்ததை சமூக வலைதளவாசிகள்  பலரும் கேலி செய்து வருகின்றனர். ஐசிசி-யும் தனது டுவிட்டரில் அமெரிக்க ஜனாதிபதி  உச்சரித்த சூசின் தெண்டுல்கரை கூகுளில் தேடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.



நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் டுவிட்டரில் தனக்கு எந்த துப்பும் இல்லாத நபர்களின் பெயர்களை தவறாக உச்சரித்ததற்காக டிரம்பை ஏன் வெறுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளரான பியர்ஸ் மோர்கனுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியை ட்ரோல் செய்தார்.


Next Story