தேசிய செய்திகள்

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப் + "||" + US departs by separate plane, President Trump

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மற்றும் சபர்மதி ஆசிரமம், தாஜ்மஹால் ஆகிய இடங்களில் நேற்று கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் இன்று இந்திய பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.


பின்னர் இன்று மாலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை  ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் வரவேற்றார்.  இரவு அமெரிக்க அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது 36 மணிநேர சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அதிபர் டொனால்டு டிரம்ப், தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜோட் குஷ்னருடன் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.