உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்


உள்துறை அமைச்சர் அமித்ஷா  உடனடியாக பதவி விலக வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Feb 2020 7:36 AM GMT (Updated: 26 Feb 2020 7:36 AM GMT)

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின்  காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி வத்ரா, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

வெளிநாடு சென்றிருப்பதால் ராகுல் காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்தக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  

இதையடுத்து, டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசும் காரணம் எனவும் , வன்முறையை கட்டுப்படுத்த தவறிய அமித்ஷா உடனடியாக உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  


Next Story