டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க பிரதமர் மோடி வேண்டுகோள்


படம் : ANI
x
படம் : ANI
தினத்தந்தி 26 Feb 2020 8:51 AM GMT (Updated: 26 Feb 2020 8:51 AM GMT)

டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லியில்  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன இது வன்முறையாக மாறியது.

மூன்று நாட்களாக  நடந்த இந்த வன்முறையில் டெல்லியில் கடந்த சில நாட்களாக பதற்றமான  சூழல் நிலவி வருகிறது. வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். டெல்லி மக்கள் சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.  அமைதி,ஒற்றுமையே நமது பண்பாட்டின் அடையாளங்கள் ஆகும். டெல்லியில்  அமைதியை நிலை நாட்ட  எனது சகோதரிகள் மற்றும் டெல்லியின் சகோதரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.  அமைதியாக இருப்பது முக்கியம் மற்றும் இயல்புநிலை விரைவில் மீட்டெடுக்கப்படும்.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அமைதியையும் இயல்புநிலையையும் உறுதிப்படுத்த காவல்துறையும் பிற பாதுகாப்பு அமைப்புகளும் துரிதமாக செயல்பட்டு வருகின்றன என கூறி உள்ளார்.



Next Story