இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் ஜொலித்த இவான்கா டிரம்ப்


இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் ஜொலித்த  இவான்கா டிரம்ப்
x
தினத்தந்தி 26 Feb 2020 11:38 AM GMT (Updated: 26 Feb 2020 11:57 AM GMT)

இந்திய பயணத்தின் போது இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் கைவண்ணத்தில் இவான்கா டிரம்ப் ஜொலித்தார்

புதுடெல்லி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  இரண்டு நாள் பயணமாக இந்திய வருகையின் போது அவருடைய மகள் இவான்கா டிரம்பும்  அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதியின் அமெரிக்க தூதுக்குழுவின் ஒரு பகுதியாக வந்து இருந்தனர்.

இவான்கா டிரம்ப் இந்திய ஆடை வடிவமைப்பாளர்களான அனிதா டோங்ரே மற்றும் ரோஹித் பால் ஆகிய இருவரின் வடிவமைப்பில் உருவாக்கிய  ஆடைகளுடன் வலம் வந்தார்

அகமதாபாத்திற்கு வந்தவுடன் அவர் அணிந்திருந்த மிடி-டிரஸ் தவிர, இவான்காவின் மற்ற இரண்டு ஆடைகளும் இந்திய வடிவமைப்பாளர்களின் ஆடை ஆகும் 

ப்ளோரல் பிரிண்ட் டிசைன்ஸ்  "புரோன்சா ஷவுலர்"  பிராண்ட் உடைகளில்  தாஜ்மஹால் சென்றார். புரோன்சா ஷவுலர் என்பது 2002 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் வடிவமைப்பாளர்களான ஜாக் மெக்கல்லோ மற்றும் லாசரோ ஹெர்னாண்டஸ் ஆகியோரால் நிறுவப்பட்ட பெண்கள் உடைகள் ஆகும்.

தாஜ்மஹால் சென்ற புகைப்படங்களை "தாஜ்மஹால். தாஜ்மஹாலின் அழகு பிரமிக்க வைக்கிறது!" என இவான்கா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவான்கா அணிந்திருந்த இந்த மிடியை ஏற்கனவே 2019 ஆண்டு அர்ஜென்டினா விசிட்டின் போதும் அணிந்திருக்கிறார். இந்த ஆடையின் விலை இந்திய மதிப்பின் படி 1,71,331 ரூபாயாகும்.

அர்ஜெண்டினா சென்ற போது அவர் ஷார்ட் சிக் பாப் ஹேர் கட் செய்து ஆடைக்கு ஏற்ப பேபி புளூ காலணி அணிந்திருந்தார். ஆனால் இந்திய வருகையில் முடியை  வளர்த்து நீளமான முடியில் சிவப்பு நிற காலணி அணிந்து வந்தார். 




இவான்கா இந்தியா வருவது இது முதல்முறையல்ல. இரண்டாவது முறையாக பிப்ரவரி 24 தேதி அகமதாபாத்திற்கு வந்த இவான்கா பேபி புளூ நிறத்தில் அதன் மேல் பளீர் சிவப்பு நிற ப்ளோரல் டிசைன்ஸ் கொண்ட மிடி அணிந்திருந்தார்.


பிரபல இந்திய டிசைனர் அனிதா டோங்ரே வடிவமைத்த ஆடையை இரண்டாம் நாள் ஜனாதிபதி மாளிகை சந்திப்பிற்கு அணிந்து சென்றார். இந்தோ வெஸ்டர்னில் ஃபியூஷன் ஸ்டைலில் வடிவமைத்த கையால் நெய்யப்பட்ட சில்க் ஃபேப்ரிக் ஆடை . ஆடையின் வடிவமைப்பிற்கு ஏற்ப தன் அலங்காரத்தையும் செய்து இருந்தார். ஆடையின் க்ரீம் ஒயிட் நிறத்திற்கு ஏற்ப 2 இஞ்ச் கிட்டென் ஹீல்ஸ் அணிந்து இருந்தார்.


"மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத்தில் நெய்யப்பட்ட பட்டுடன் தயாரிக்கப்பட்ட ஷெர்வானி எனவும் , இது உன்னதமானது" என்று அனிதா டோங்ரே இந்தியா டுடேவிடம் தனது படைப்பு குறித்து கூறி இருந்தார்.




அடுத்ததாக ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இந்தியாவின் மற்றுமொரு பெருமைமிகு வடிவமைப்பாளர் ரோஹித் பாலின் ஆடையில் ஜொலித்தார்.


அடுத்ரோஹித் பாலின் தனித்த வடிவமைப்பான ஃப்ளோரல் டிசைன் இவான்கா அணிந்திருந்த முழுநீள அனார்கலி ஆடையிலும் இடம் பெற்றிருந்தது. க்ரீம் ஒயிட் நிறத்தில் சிவப்பு நிற பூக்கள், பச்சை நிறத்தில் கொடி படர்வது என எம்பராய்டரி வடிவமைப்பில் அமைத்திருந்தார் ரோஹித்.


View this post on Instagram

Hyderabad House

A post shared by Ivanka Trump (@ivankatrump) on


Next Story