தேசிய செய்திகள்

5 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை; 5 பேர் கைது + "||" + Mumbai: Police arrested 5 for beating a auto-rickshaw driver to death

5 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை; 5 பேர் கைது

5 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை; 5 பேர் கைது
5 ரூபாய் மீதம் கேட்ட ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புனே,

மராட்டியத்தின் மேற்கு புறநகரான போரிவலி பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது.  ராம்துலார் சர்ஜூ யாதவ் (வயது 68) என்பவர் தனது மகனை அங்கு வரும்படி தொலைபேசி வழியே கூறி விட்டு தனது ஆட்டோ ரிக்ஷாவை எடுத்து கொண்டு எரிவாயு நிரப்ப சென்றார்.

எரிவாயு நிலையத்தில் ரூ.205க்கு எரிவாயு நிரப்பி கொண்டு அங்கிருந்த ஊழியரான சந்தோஷ் ஜாதவ் என்பவரிடம் ரூ.500 கொடுத்து உள்ளார்.  ஆனால் அந்த ஊழியர் மீத தொகையான ரூ.295 தராமல் அவற்றில் ரூ.5 குறைத்து கொடுத்துள்ளார்.  மீதமுள்ள 5 ரூபாயை தரும்படி ராம்துலார் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், ராம்துலார் மற்றும் அவரது மகன் என இருவரையும் திட்டியுள்ளார்.  மற்ற ஊழியர்கள் அவர்களை அடித்து, உதைத்து உள்ளனர்.

இதில் மயங்கி விழுந்த ராம்துலார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.  எரிவாயு நிலையத்தில் பணியாற்றிய 5 ஊழியர்களை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
அரக்கோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
2. திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தண்டராம்பட்டு தாலுகா கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜி (வயது 22). இவர் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3. எலக்ட்ரீசியனை தாக்கியவர் கைது
வேட்டவலம் அருகே கல்லாய்சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதி (வயது 31), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழேந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (38), கட்டிட மேஸ்திரி.
4. வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது
வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கொத்தமங்கலம் வாடிமாநகரில் ஓட்டல் நடத்தி வந்தார்.