தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு + "||" + Delhi violence: Death toll rises to 27

டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக மோதல்கள் நடைபெற்றன.  இது வன்முறையாக மாறியது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இந்நிலையில் டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வன்முறையில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் வீடு திரும்பி விட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி வன்முறை; உளவு பிரிவு அதிகாரி படுகொலை வழக்கில் கூடுதலாக 5 பேர் கைது
டெல்லி வன்முறையில் உளவு பிரிவு அதிகாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுதலாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. டெல்லி வன்முறை: ‘சட்டத்தின்பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது’ - அமித்ஷா திட்டவட்டம்
டெல்லி வன்முறையில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
3. டெல்லி வன்முறை: 690 வழக்குகள் பதிவு
டெல்லியில் கலவரம் தொடர்பாக 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
4. டெல்லி வன்முறை விவகாரம் ; 2 மலையாள சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை
டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான ஒளிபரப்பு மூலமாக சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்ததாக இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லி வன்முறை: ஈரான் மூத்த தலைவர் கண்டனம்
டெல்லி வன்முறை ஈரான் மூத்த தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா - ஈரான் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.