கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்


கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்
x
தினத்தந்தி 27 Feb 2020 3:58 AM GMT (Updated: 27 Feb 2020 3:58 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் பயணித்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

டோக்கியோ,

ஜப்பானுக்கு சொந்தமான 'டைமண்ட் பிரின்சஸ் சொகுசுகப்பலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்களில், 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், கப்பல் தனிமை படுத்தப்பட்டது.  இதை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 500 பேருக்கு கொரானா பாதிப்பு இருந்தால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்களுக்கு பிறகு கப்பலில் இருந்து வெளியேறினர். 

இந்த நிலையில், டைமன்ட் பிரின்ஸ் கப்பலில் பயணித்த இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய தூதரகம் இறங்கியது. இதன் முயற்சியாக, 5 வெளிநாட்டு பயணிகள் உள்பட 116 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி விமான நிலையம் வந்தது.

இந்தக் கப்பலில் பயணித்த   16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் ஜப்பானில் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. 


Next Story