தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு


தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 3:52 AM GMT (Updated: 28 Feb 2020 3:52 AM GMT)

தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது.  சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.  

தென்கொரியாவில் 2,022 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 14 -பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  அதேபோல், ஜப்பானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 189 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதால், அந்த நாட்டு பயணிகளுக்கு விசா தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Next Story