தேசிய செய்திகள்

அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார் + "||" + Foreign investor sentiment not hit due to violence in Delhi: Nirmala Sitharaman

அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்

அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்
அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி, 

அசாம் மாநிலம், கவுகாத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம், வன்முறை குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், “இவை அன்னிய முதலீட்டாளர்களிடையே பாதிப்பை ஏற்படுத்த வில்லை. சமீபத்தில் நான் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, முதலீட்டாளர்கள் என்னை சந்தித்தனர். இந்தியாவில் கூடுதல் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தனர்” என கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய தொழில் துறை, பொருளாதாரம் பாதிக்குமா எனவும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “தற்போது எந்த பாதிப்பும் இல்லை. 

ஆனால் அடுத்த 2 மாதங்களில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், கச்சா பொருட் கள் தட்டுப்பாடு வரலாம். இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, தொழில் துறைக்கு உதவலாம் என சிந்தித்து செயலாற்றி வருகிறோம்” என பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது- நிர்மலா சீதாராமன்
போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது; பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியிலான மாற்றம் தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
2. தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன- நிர்மலா சீதாராமன்
தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
3. உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின்நோக்கம் - நிர்மலா சீதாராமன்
உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.