ஜெனீவாவின் மனித உரிமை அலுலகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்


படம் : ANI
x
படம் : ANI
தினத்தந்தி 29 Feb 2020 5:43 AM GMT (Updated: 29 Feb 2020 5:43 AM GMT)

ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை அலுவலகத்திற்கு வெளியே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் ராணுவம் என்று போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43-வது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.  அமர்வில்  ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை எழுப்பிய பின்னர் பதிலளிக்கும் உரிமையை உறுதிப்படுத்திய இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன், சர்வதேச அளவில் பாகிஸ்தான் வெறித்தனமான எதிர்விளைவுகளால் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த முடியாது என்று கூறினார். 

பாகிஸ்தானுக்கு 10 அம்ச ஆலோசனை பட்டியலை வழங்கிய இந்திய தூதர் ஆரியன் பயங்கரவாத நிதியுதவியை நிறுத்தி, நாட்டிலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களிலும் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அகற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில்  ஜெனிவாவில் உள்ள உடைந்த நாற்காலி நினைவுச்சின்னத்திற்கு அருகே பாகிஸ்தான் ராணுவம் உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்று கண்டனத்துடன் போஸ்டர்  வைக்கப்பட்டு இருந்தது.

பாகிஸ்தான் ரகசிய ஆதரவு மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் இருந்தது. பாகிஸ்தானின் சிறுபான்மை சமூக உறுப்பினர்களால் போஸ்டர்கள்  ஒட்டப்பட்டு இருந்தது.

Next Story