தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் பரவலாம் - நிபுணர்கள் எச்சரிக்கை + "||" + India at virus risk from Kabul

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் பரவலாம் - நிபுணர்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து  இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் பரவலாம்  - நிபுணர்கள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் பரவலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஐதராபாத்:

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு ஏராளமான மருத்துவ மற்றும் வர்த்தக விசாக்கள் வழங்கப்படுவதால் கொரோனா வைரஸ் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் 100க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த நோயாளிகள் புதுடெல்லிக்கு வருகை தருகிறார்கள்.ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை வரை ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது. இருந்தபோதிலும், இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

சீனாவுக்கு வெளியே கொரோனா அதிக அளவு பாதிப்பு உடைய நாடாக  ஈரான் உள்ளது, மேலும் வைரஸ் ஈரானில் இருந்து சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பயணிகள்  வழியாக பயணித்தது.  இதனால்  புனித பயணம் நிறுத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தபட்டு. தற்போது புனித பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

ஆசியா மற்றும் ஓசியானியாவில் உள்ள மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் கே.கே. அகர்வால் கூறும் போது 

தென் கொரியாவிலும் ஈரானிலும் கொரோனா  வைரஸ் பரவி உள்ளது.  இந்தியா ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது, அதைச் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்? வெப்பம் அல்லது வெப்பமான சூழ்நிலைகள் வைரஸை தடுக்கும் என்று நாங்கள் இனி சொல்ல முடியாது. 

அதி வேகமாக பரவும் நோய்  என்ற கருத்து கொரோனா வைரஸில் உருவாகியுள்ளது, மேலும் இது இருமலின் வடிவத்தை எடுத்துக்கொள்கிறது, அங்கு வைரஸ்கள் பாதிக்கப்பட்ட உடலில் இருந்து பெரிய  ர்த்துளிகளாக வெளியேற்றப்படுகின்றன, இது மற்றவர்களால் தொடப்படுகிறது, இது நோய் பரவ வழிவகுக்கிறது என கூறினார்.

மூடிய பகுதிகளில் உள்ள ஏராளமான நீர்த்துளிகள் 30 க்கும் மேற்பட்டவர்களை ஒரே நேரத்தில்  பாதிக்கலாம்.

ஈரான், தென் கொரியா, இத்தாலி, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனாவுக்கு பயணம் செய்த வரலாறு இல்லை, சீனாவிலிருந்து வரும் பயணிகளுடன் தொடர்பு இல்லை.பாதிக்கப்பட்ட மேற்பரப்பின் தொடுதலால் தான் இது என்று நிபுணர்கள் முடிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தருவது நிறுத்தம்: உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தந்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
2. கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை: அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்ய அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.