சிஏஏவுக்கு எதிராக மராட்டிய சட்டசபையில் தீர்மானம் தேவையில்லை ; அஜித் பவார்


சிஏஏவுக்கு எதிராக  மராட்டிய சட்டசபையில் தீர்மானம் தேவையில்லை ; அஜித் பவார்
x
தினத்தந்தி 2 March 2020 2:26 AM GMT (Updated: 2 March 2020 3:00 AM GMT)

சிஏஏவுக்கு எதிராக மராட்டிய சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லை என்று அம்மாநில துணை முதல் மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

குடியுரிமை திருத்தச் சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள்தொகை பதிவேடு )ஆகியவற்றுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றத் தேவையில்லை என்று அந்த மாநில துணை முதல் மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாா் கூறியுள்ளாா்.

கட்சி நிர்வாகிகள் மத்தியில்  பேசிய அஜித் பவார் கூறியதாவது ;- சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை எவருடைய குடியுரிமையையும் பறிக்காது. எனவே, அவற்றுக்கு எதிராக  மராட்டிய  பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது தேவையில்லாத ஒன்று. ஆனால், சிலா் தவறான தகவல்களைக் கொண்டு வதந்தி பரப்பி வருகிறாா்கள். இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றாா்


Next Story