டெல்லி வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு


டெல்லி வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 March 2020 10:45 AM IST (Updated: 2 March 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் வடகிழக்கு டெல்லியில்  மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக இருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயரந்து  உள்ளது. இந்த வன்முறை தொடர்பான வழக்குகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை நடத்தி வருகிறது.

வன்முறை காரணமாக  903 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த 4 நாட்களில் வன்முறை தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு எந்த அழைப்புகளும் வரவில்லை என்றும், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது போலீசாரின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story