டெல்லியில் நடந்து வரும் வன்முறைகள் "திட்டமிட்ட இனப்படுகொலை"- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி : படம் : PTI
x
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி : படம் : PTI
தினத்தந்தி 2 March 2020 4:46 PM IST (Updated: 2 March 2020 4:46 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்து வரும் வன்முறைகள் "திட்டமிட்ட இனப்படுகொலை" என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

கொல்கத்தா

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் வடகிழக்கு டெல்லியில்  மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து உள்ளது. இந்த வன்முறை தொடர்பான வழக்குகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை செய்து வருகின்றன.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசும் போது கூறியதாவது:-

டெல்லியில் நடந்து வரும் வன்முறைகள் "திட்டமிட்ட இனப்படுகொலை"குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

சீக்கியக் கலவரத்திற்குப் பிறகு  டெல்லி வன்முறையை போலீஸ், சிஆர்பிஎஃப், ராணுவம் மற்றும் எஸ்எஸ்பி  என  எல்லாவற்றையும்  கொண்டிருந்தாலும், நிலைமையை ஏன் மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை 

டெல்லி  வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து நான் மிகவும் வேதனையடைகிறேன். இதனை இனப்படுகொலையாகவே நான் கருதுகிறேன். இனியும் இதுபோன்ற நிகழ்வுகளால் மக்கள் உயிரை இழப்பதை நான் விரும்பவில்லை. 

இன்று இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் தான் காரணம் என்பதை அமைச்சர் அமித் ஷா  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். டெல்லியில் நடந்த வன்முறைக்கு பாஜக ஏன் மன்னிப்பு கேட்கவில்லை. அது மத்திய அரசால் நடத்தப்பட்டது என கூறினார்.

Next Story