பிரதமர் மோடியுடன் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
பிரதமர் மோடியை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் பிரதமரை முதல் முறையாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ½ மணி நேரம் நீடித்தது.
அப்போது, டெல்லி கலவரம் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம், அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வதந்திகள் பரவியபோது நிலைமையைக் கட்டுப்படுத்த டெல்லி போலீசார் விரைந்து செயல்பட்டனர். இதே வேகத்துடன் கடந்த வாரமும் செயல்பட்டு இருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். அதை பிரதமரும் ஆமோதித்தார்’ என்று கூறினார்.

Related Tags :
Next Story