புதுச்சேரி கல்வி மந்திரியின் மொபைல் போன் மர்ம நபர்களால் பறிப்பு
புதுச்சேரி கல்வி மந்திரி நடந்து சென்றபொழுது அவரது மொபைல் போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் முதல் மந்திரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவரது அமைச்சரவையில் கல்வி மந்திரியாக இருந்து வருபவர் கமலக்கண்ணன். அவர் புதுச்சேரி பீச் சாலையில் நேற்றிரவு தனது மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.
அவர் பெட்ரோல் பம்ப் ஒன்றின் அருகே சென்றபொழுது, அந்த வழியே வேகமுடன் வந்த பைக் ஒன்று அவரருகே சென்றது. திடீரென பைக்கில் இருந்த இரண்டு மர்ம நபர்கள் மந்திரியிடம் இருந்து மொபைல் போனை பறித்து கொண்டு சென்றனர்.
இதுபற்றி ஒடியன்சாலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story