மே.வங்காளத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே ; மம்தா பானர்ஜி


மே.வங்காளத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே ; மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 4 March 2020 8:13 AM IST (Updated: 4 March 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

மே.வங்காளத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

வங்கதேசத்தில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்த அனைவரும் இந்திய குடிமக்கள் என்றும், அவர்கள் குடியுரிமை கோரி புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார்.

கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல்களில் அவர்கள் வாக்களித்து, பிரதமரையும் முதலமைச்சரையும் தேர்வு செய்தது மட்டுமின்றி பஞ்சாயத்து நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்து இருப்பதாக குறிப்பிட்டார்.

ஒரு நபரைக் கூட மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய மம்தா இங்கு வாழும் எந்த ஒரு அகதியும் குடியுரிமையை இழக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

Next Story