எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடங்கியது
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடங்கியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லி வன்முறை குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதில் அமளி ஏற்பட்டு நாள் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 2-வது நாளான நேற்றும் இரண்டு அவைகளிலும் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டதால் , அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று 3-வது நாளான இன்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story