ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைப்பு


ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 4 March 2020 4:36 PM IST (Updated: 4 March 2020 4:36 PM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-எப்10 என்ற ராக்கெட் மூலம் நாளை 5-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட்  ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் விண்ணில் செலுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Next Story