தேர்வு நேரத்தின் போது மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர அனுமதி - சிபிஎஸ்இ


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 4 March 2020 9:40 PM IST (Updated: 4 March 2020 9:40 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு நேரத்தின் போது முகக்கவசம் அணிந்து கொள்ள மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  நாளுக்கு நாள் தொடர்ந்து வைரஸ் பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் உலகம் முழுவதும் பரவிய  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பு எதிரொலியால், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள், மாஸ்க், ஹேண்ட் சானிடைசர் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில முதன்மை செயலாளர்கள் மற்றும் சிபிஎஸ்இ இயக்குநர்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story