சமூக வலைத்தளங்களில் சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் முன்கூட்டியே கசிந்ததாக வதந்தி - டெல்லி போலீசில் புகார்
சமூக வலைத்தளங்களில் சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் முன்கூட்டியே கசிந்ததாக வெளியான வதந்தி குறித்து டெல்லி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ.யின் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கின. இந்த நிலையில் கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்துள்ளதாகவும், மாணவர்கள் பணம் செலுத்தி பெறுமாறும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் வெளியாகின. இதை சி.பி.எஸ்.இ. திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த வதந்திகளை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இந்த வதந்திகளை பரப்பியவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி போலீசில் புகார் செய்துள்ளது.
இதையொட்டி சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவர் கூறுகையில், “போலியான, தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பை விரும்புகிறோம். என்ன விலை கொடுத்தேனும் தேர்வுகளின் புனிதத்தை காப்பதற்கு எங்களுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story