தேசிய செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Aircel Maxis case: Chidambaram response time to file - Order of Delhi High court

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி முன்ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் மேல்முறையீடு செய்துள்ளது.


இந்த மேல்முறையீடு, நீதிபதி அனு மல்கோத்ரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை இயக்குனரகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் அமித் மகாஜன், மல்லிகா ஹயர்மாத் ஆகியோர் இதில் பதில் மனு தாக்கல் செய்ய ப.சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி ஐகோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்தும், அவர்கள் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தனர்.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் தயான் கிருஷ்ணனும், அர்ஷ்தீப் சிங்கும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு 3 வாரம் அவகாசம் அளித்து நீதிபதி அனு மல்கோத்ரா உத்தரவிட்டார்.

அந்த பதில் மனு மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் பதில் தாக்கல் செய்ய விரும்பினால், அதன் பின்வரும் 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட விசாரணையை மே மாதம் 12-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் உரையை ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன்- ப.சிதம்பரம் டுவிட்
பிரதமர் உரையை ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2. 4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து நகரங்களையும் 4 வாரங்களுக்கு மூட வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
3. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் - ப.சிதம்பரம் வேண்டுகோள்
நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. பொது பாதுகாப்பு சட்டம் ஜனநாயகத்தில் மிக மோசமானது அருவருப்பானது- ப.சிதம்பரம்
உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
5. பணம் திரட்டுவதற்காக மட்டுமே எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது - ப.சிதம்பரம் கருத்து
பணம் திரட்டுவதற்காக மட்டுமே எல்.ஐ.சி. பங்குகளை விற்கக்கூடாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.