இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் உள்ள அவரது உறவினர்கள் 6 பேருக்கும், சுற்றுலா வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 16 பேருக்கும், அவர்களின் இந்திய டிரைவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கேரளாவில் பாதிக்கபட்ட 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் குர்கானை சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எனண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது.
இது குறித்து பேடிஎம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பணியாளர் சமீபத்தில் ஐரோப்பாவின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் இருந்து திரும்பியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது போல் ஜோஹோ நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களது வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story