தேசிய செய்திகள்

ரூ.9½ கோடி வரி பாக்கிக்காக நிரவ் மோடியின் 3 சொத்துகள் முடக்கம்; மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை + "||" + Rs.9½ crores for the tax Dues ; Nirav Modi's 3 assets freeze; Mumbai Corporation Action

ரூ.9½ கோடி வரி பாக்கிக்காக நிரவ் மோடியின் 3 சொத்துகள் முடக்கம்; மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

ரூ.9½ கோடி வரி பாக்கிக்காக நிரவ் மோடியின் 3 சொத்துகள் முடக்கம்; மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
மும்பை, 

லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிரவ் மோயை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நிரவ் மோடி மும்பை மாநகராட்சிக்கு ரூ.9½ கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளார். எனவே அந்த வரியை வசூலிக்க நிரவ் மோடியின் 3 சொத்துகளை மாநகராட்சி அதிரடியாக முடக்கி உள்ளது.

அதன்படி அவருக்கு சொந்தமான வணிக கட்டிடம், ஒரு குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட 3 சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான நோட்டீசையும் அந்த கட்டிடங்களில் மாநகராட்சி ஒட்டி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 27-ந் தேதிவரை நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு - லண்டன் கோர்ட்டு உத்தரவு
நிரவ் மோடிக்கு 27-ந் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
3. நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.