வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு குறித்து பரிசீலனை; நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு குறித்து பரிசீலனை; நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 6 March 2020 4:56 AM IST (Updated: 6 March 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுடெல்லி,

பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும், போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியது.

இந்த திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story