அமித்ஷா பதவி விலகக்கோரி ராகுல் காந்தி தலைமையில் காங். எம்பிக்கள் போராட்டம்
அமித்ஷா பதவி விலகக்கோரி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றன.
இந்த நிலையில், டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story