மகளிர் தினம்: என் வாழ்க்கையை மாற்றிய 5 பெண்கள் சச்சின் தெண்டுல்கர் நெகிழ்ச்சி
மகளிர் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்வில் முக்கியமான 5 பெண்களை பற்றி புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மும்பை,
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களை போற்றும் விதமாக உலகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மகளிர் தினத்துக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் தங்கள் வாழ்வில் முக்கிய பங்காற்றும் பெண்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மகளிர் தினமான இன்றைய நாளில் தன் வாழ்வின் முக்கியமான 5 பெண்கள் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
5 முக்கியமான பெண்கள் என் வாழ்க்கையில் 5 பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். என்னுடைய அம்மா, என்னுடைய அத்தை, என்னுடைய மனைவி அஞ்சலி, மனைவியின் தாயார், என்னுடைய மகள் சாரா -ஆகியோர் முக்கிய பங்காற்றி உள்ளனர். எல்லா அம்மாக்களையும் போலவே என்னுடைய ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்துக்கும் என் அம்மாவே காரணம்.
4 ஆண்டுகள் நான் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்ட போது என் அத்தையின் வீட்டில் தான் தங்கினேன். அவர்கள் எனக்கு இன்னொரு தாயாக இருந்து என்னை நன்கு கவனித்துக்கொண்டார்.
என் மனைவி அஞ்சலி, நான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுங்கள் என என் சுமையில் பாதியை ஏற்றுக்கொண்டார்.
மேலும் அவளின் அம்மா, அப்பா இருவரும் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தனர். என் மகள் சாரா அனைத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த பெண்மணியாக வளர்கிறாள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story