மழையால் வீட்டுக்கூரை இடிந்தது; ஒரே குடும்பத்தில் 4 பேர் சாவு
மழையால் வீட்டுக்கூரை இடிந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் சங்ருர் மாவட்டம் சுனம் நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில், குடியிருப்பு பகுதியில் பழைய வீடு ஒன்றின் சுவரில் விரிசல் விழுந்தது. தொடர்ந்து பெய்த மழையால், வீட்டுக்கூரை இடிந்து விழுந்தது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி, 6 வயது மற்றும் 8 வயதான இரண்டு மகன்கள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர்கள், சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதே வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத் தலைவரின் பெற்றோர், சகோதரி ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story