மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. மரணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. நேற்று மரணமடைந்தார்.
கொல்லம்,
கேரள மாநிலம் சாவரா தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. என்.விஜயன் பிள்ளை நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 65. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
விஜயன் பிள்ளை, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் நாராயணன் பிள்ளையின் மகன் ஆவார். அந்த கட்சியில் பஞ்சாயத்து உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர், ஜனநாயக இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ், சி.எம்.பி. (அரவிந்தாக்ஷன் குழு) ஆகிய கட்சிகளிலும் பயணம் செய்து, இறுதியாக மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

Related Tags :
Next Story