கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ; தொலைபேசி மூலம் மத்திய சுகாதாரத்துறை அறிவுரை

கொரோனா பரவலை தடுத்திட மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் பொது மக்களுக்கு செல்போன் வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்பட உலக நாடுகளை உலுக்கியுள்ளது. 97 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செல்போன் வாயிலாக அறிவுரையை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
இதன்படி, நாம் ஒருவரை செல்போன்களில் தொடர்பு கொள்ளும் போது, இருமல் சத்தம் முதலில் கேட்கிறது. தொடர்ந்து கொரோனா பரவலை நம்மால் தடுத்திட முடியும் இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை அல்லது டிஷ்யு பேப்பரை பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது கைகளை சோப்பை கொண்டு கழுவ வேண்டும் கண், வாய், மூக்கை தொடக் கூடாது.
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலுடன் உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தள்ளி இருங்கள். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகிட வேண்டும். உதவி தொலைப்பேசி எண் 01123978046” என்ற தகவல் வருகிறது.
பி.எஸ்.என்.எல், ஜியோ, ஏர்டெல், வோடோபான் ஐடியா என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த விழிப்புணர்வு தகவலை அளித்து வருகின்றன.
Related Tags :
Next Story