ஹோலி கொண்டாட்டத்தில் சீன பொருட்களை தவிர்க்கவும்; ராஜஸ்தான் சுகாதார மந்திரி
கொரோனா வைரஸ் எதிரொலியாக ஹோலி கொண்டாட்டத்தில் சீன பொருட்களை தவிர்க்கும்படி ராஜஸ்தான் சுகாதார மந்திரி பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
ஜெய்ப்பூர்,
நாட்டில் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வடமாநில மக்கள் வண்ண பொடிகள், இனிப்பு பொருட்கள், புது ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்குவார்கள். ரங்கோலி உள்ளிட்ட கோலங்களை வரைந்து மகிழ்வார்கள்.
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் 43 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால், ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட போவதில்லை என பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அறிவித்து உள்ளனர்.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் சுகாதார மந்திரியாக ரகு சர்மா இருந்து வருகிறார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், நிலைமை ராஜஸ்தானில் கட்டுக்குள்ளேயே உள்ளது. ஆனால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் அல்லது இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை அணுக வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, ஹோலி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் சீன பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்கள் கலந்த வண்ண பொடிகள் வாங்காமல் அவற்றை தவிர்க்கவும். இயற்கை வண்ண பொடி அல்லது குலால் பயன்படுத்த வேண்டும் என அவர்களிடம் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story