கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: இந்தியர்களை மீட்டுவர ஈரானுக்கு விமானம் புறப்பட்டது


கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: இந்தியர்களை மீட்டுவர ஈரானுக்கு விமானம் புறப்பட்டது
x
தினத்தந்தி 10 March 2020 2:29 AM IST (Updated: 10 March 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, இந்தியர்களை மீட்டுவர ஈரானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

புதுடெல்லி,

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 237 பேர் பலியாகி உள்ளனர். 7 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இருப்பார்கள் என கருதப்படுகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்தியர்களை மீட்டுவர உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி–17 என்ற விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு ஈரான் புறப்பட்டது. விமானத்தில் மருத்துவ குழுவினரும் சென்றுள்ளனர். அந்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்தியா திரும்பும் என தெரிகிறது. அந்த விமானத்தில் வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுடன் கூடிய தனிமை முகாம்களும் தயார்நிலையில் உள்ளன.


Next Story