3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று: பிரதமர் மோடியின் வங்காளதேச பயணம் ஒத்திவைப்பு


3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று: பிரதமர் மோடியின் வங்காளதேச பயணம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 March 2020 2:46 AM IST (Updated: 10 March 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பிரதமர் மோடியின் வங்காளதேச பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா வருகிற 17-ந் தேதி தொடங்குவதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்பதாகவும் இருந்தது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விழா உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளிவைப்பதாக வங்காளதேச அரசு அறிவித்தது.

இந்த தகவல் இந்திய பிரதமர் மோடிக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சகமும், பிரதமர் மோடியின் வங்காளதேச பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தது.

Next Story