கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்வு
கேரளாவை சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட சுமார் 100 நாடுகளில் பரவி விட்டது.
இந்தியாவில் முதலில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு இந்நோய் தாக்கியது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தெலுங்கானா என பல மாநிலங்களிலும் பரவியது. நேற்று முன்தினம் கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், நேற்று மேலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.
இந்த 5 பேரில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 3 வயது குழந்தையும் அடங்கும். குழந்தையின் குடும்பம், இத்தாலிக்கு சென்றிருந்தது. அங்கிருந்து கடந்த 7-ந் தேதி காலை 6 மணியளவில் கொச்சிக்கு விமானத்தில் வந்திறங்கியது.
விமான நிலையத்தில், கொரோனா வைரசை கண்டறிய தெர்மல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து, குழந்தையும், அதன் பெற்றோரும் கொச்சியில் உள்ள கலமசேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு தனிவார்டில் அனு மதிக்கப்பட்டனர்.
குழந்தையின் ரத்த மாதிரி, தேசிய தொற்றுநோய் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது, குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பெற்றோரின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்தினருடன் பழக்கம் வைத்திருந்த 10 பேர், கலமசேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள், உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 63 வயதான ஒரு பெண், சமீபத்தில் ஈரான் நாட்டுக்கு சென்று திரும்பினார். அவருக்கு நோய் அறிகுறி இருந்ததால், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு பெண்ணுக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. அந்த பெண், சமீபத்தில் சவுதி அரேபியா சென்று திரும்பிய பிறகு நோய் அறிகுறிகள் காணப்பட்டன.
இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் முழு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பெண்களுடன் அறிமுகம் உள்ள 400 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக காஷ்மீர் நிர்வாக செய்தித்தொடர்பாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார். அங்கன்வாடி மையங்கள், 31-ந் தேதிவரை மூடப்பட்டுள்ளன.
அதுபோல், டெல்லியில் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சமீபத்தில் இத்தாலிக்கு சென்று திரும்பி உள்ளார்.
4-வது நபர், உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர். ஆக்ராவை சேர்ந்த 6 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் பழக்கம் வைத்திருந்ததால், அவருக்கும் நோய் தாக்கி உள்ளது.
அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் பெங்களூரு திரும்பிய என்ஜினீயர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது நேற்று தெரிய வந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியாவில் யாரும் இறக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒருவர் பலியானதாக கூறப்படுவதை மறுத்துள்ளது. அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்ததாகவும், அவர் வேறு பின்னடைவுகளால் உயிரிழந்ததாகவும் தெரிவித்தது.
வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.
இதற்கிடையே, நாடு முழுவதும் தனி கண்காணிப்பு முகாம்களை அமைக்குமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுபாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை உள்ளிட்ட துணை ராணுவப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 37 இடங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 440 படுக்கை வசதி கொண்ட முகாம்களை அமைக்குமாறு கூறியுள்ளது. அந்த இடங்களில், 75 தனி வார்டுகளை உருவாக்குமாறும், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரை அனுப்பி வைக்குமாறும் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story