ம.பியில் காங்.ஆட்சி கவிழ்கிறது? அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமா


ம.பியில் காங்.ஆட்சி கவிழ்கிறது? அதிருப்தி  எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமா
x
தினத்தந்தி 10 March 2020 1:40 PM IST (Updated: 10 March 2020 3:49 PM IST)
t-max-icont-min-icon

ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமாவால் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போபால், 

மத்திய பிரதேசத்தில்  ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.  தங்களது ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச ஆளுநருக்கு 19 எம்.எல்.ஏக்களும் அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக 114 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சியின் பலம் 95 ஆக குறைந்துள்ளது.  சட்டப்பேரவையில் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து காங்கிரசின் பலம் 102 ஆக குறைந்துள்ளது.  

இதனால், 107 எம்.எல்.ஏக்களை  கொண்ட  பாஜக பெரும்பான்மை பெறும் சூழல் நிலவுகிறது.  இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.   எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 105 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலை உள்ளது.பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story