மாநிலங்களவையில் அனுராக் தாக்குர் பேச எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


மாநிலங்களவையில் அனுராக் தாக்குர் பேச எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 March 2020 3:45 AM IST (Updated: 12 March 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவையில் அனுராக் தாக்குர் பேச எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, ஆத்திரமூட்டும் பேச்சுகளை பேசியதாக தேர்தல் கமிஷனால் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் கண்டிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளும் அவரை விமர்சித்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சார்பில் இரண்டாவது மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்ய அனுராக் தாக்குரை சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அழைத்தார். அனுராக் தாக்குரும் எழுந்து மானிய கோரிக்கை தாக்கல் செய்ய தயாரானார்.

அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் அமளி தொடர்ந்தபோது, பா.ஜனதா உறுப்பினர்கள், மத்தியபிரதேசத்தில் ஆட்சியை இழக்கப்போவதால் காங்கிரஸ் கட்சி கொந்தளிப்பதாக கூறினர். அதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள், பா.ஜனதாதான் கட்சி தாவலை தூண்டுவதாக குற்றம் சாட்டினர். அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.


Next Story