ஐ.பி.எல். போட்டிகள் நடத்த வேண்டாம் மத்திய அரசு அறிவுரை


ஐ.பி.எல். போட்டிகள் நடத்த வேண்டாம்   மத்திய அரசு அறிவுரை
x
தினத்தந்தி 13 March 2020 4:15 AM IST (Updated: 13 March 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐ.பி.எல். கிரிக்கெட் பந்தயங்களை நடத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.

புதுடெல்லி, 

வெளியுறவுத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் டம்மு ரவி நேற்று அளித்த பேட்டியில், “இந்த நேரத்தில் ஐ.பி.எல். பந்தயங்களை நடத்த வேண்டாம் என்பதுதான் மத்திய அரசின் அறிவுரை. ஆனால், போட்டியை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி போட்டி அமைப்பாளர்கள்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் நடத்த விரும்பினால், அது அவர்கள் முடிவு“ என்று கூறினார்.

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமாரும் இதே கருத்தை தெரிவித்தார்.

Next Story