வரலாறு காணாத வீழ்ச்சி: இந்திய பங்கு சந்தைகளின் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தம்.!


வரலாறு காணாத வீழ்ச்சி: இந்திய பங்கு சந்தைகளின் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தம்.!
x
தினத்தந்தி 13 March 2020 10:32 AM IST (Updated: 13 March 2020 12:44 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

மும்பை

வரலாற்றில் இல்லாத  அளவு பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டு உள்ளது.  முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3090 புள்ளிகள் சரிந்து 29,687 புள்ளிகளில் வர்த்தகம் உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 966 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது 8,624 புள்ளிகளில் வர்த்தகம் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.74.43 ஆக வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.12 ஆண்டுகளுக்குப் பிறகு 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

Next Story