கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: 7 நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்; ஏர் இந்தியா அறிவிப்பு


கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: 7 நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்; ஏர் இந்தியா அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2020 10:39 PM IST (Updated: 13 March 2020 10:39 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 7 நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  81 ஆக அதிகரித்து உள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

இந்நிலையில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென்கொரியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை விமானசேவை நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஏப்ரல் 15ம் தேதி வரையில் அனைத்து வித விசாக்களையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியாவும் தற்போது 7 நாடுகளுக்கு தற்காலிகமாக விமான சேவையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.


Next Story