யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் 18-ந் தேதி தளர்த்தப்படும்: புனரமைக்கும் திட்டமும் அறிவிப்பு


யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் 18-ந் தேதி தளர்த்தப்படும்: புனரமைக்கும் திட்டமும் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2020 10:00 PM GMT (Updated: 14 March 2020 9:15 PM GMT)

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் 18-ந் தேதி தளர்த்தப்படும் என்றும், புனரமைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நிதிநெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை கடந்த 5-ந் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதன் நிறுவனர் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்தை 13-ந் தேதி அறிவித்துள்ளது.

அதன்படி, அந்த வங்கியில் உள்ள தனது பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி 3 ஆண்டுகளுக்கு 26 சதவீதத்துக்கு கீழ் குறைக்கக் கூடாது. மற்ற முதலீட்டாளர்கள், தற்போதுள்ள பங்குதாரர்களின் 75 சதவீத பங்குகள் 3 ஆண்டுகளுக்கு முடக்கிவைக்கப்படும். 100 பங்குகளுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் தலைமையிலான புதிய நிர்வாகம் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்கும். வருகிற 18-ந் தேதி யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

Next Story