கொரோனா அச்சுறுத்தல்: வங்காளதேச எல்லை மூடப்பட்டது


கொரோனா அச்சுறுத்தல்: வங்காளதேச எல்லை மூடப்பட்டது
x
தினத்தந்தி 15 March 2020 9:02 PM GMT (Updated: 15 March 2020 9:02 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வங்காளதேச எல்லை மூடப்பட்டது.

கொல்கத்தா,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மேற்கு வங்காள மாநிலத்துக்கும் வங்காளதேசத்துக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் உள்ள நுழைவு வாயில்களில் ஒரேயொரு இடத்தை தவிர மற்ற அனைத்து நுழைவு வாயில்களையும் மேற்கு வங்காள அரசு நேற்று மூடிவிட்டது.

நாடியா மாவட்டத்தில் ஜெடே என்ற இடத்தில் உள்ள நுழைவு வாயில் வழியாக மட்டும் வாகன போக்குவரத்து நடைபெறும் என்றும், மற்ற அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டுவிட்டதாகவும் மேற்கு வங்காள அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பயண விசாவுடன் வரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த யாரும் மேற்கு வங்காளத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.


Next Story