நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி


நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 17 March 2020 1:51 PM GMT (Updated: 17 March 2020 1:51 PM GMT)

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் சிங்  தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் 2012 டிசம்பர் 17-ல் போலீசார் தம்மை ராஜஸ்தானில் கைது செய்தனர் என்றும், சம்பவம் நடந்த டிசம்பர் 16 ஆம் தேதி தாம் டெல்லியில் இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது சிறையில் தம்மை சித்திரவதை செய்கின்றனர் எனவும் மனுவில் கூறியுள்ளார். முகேஷ் சார்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த மனுவைத் தாக்கல் செய்தா. 

இந்தநிலையில்  தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே நிர்பயா குற்றவாளிகள் வரும் 20-ம் தேதி தூக்கிலிடப்பட உள்ளனர். இதனையொட்டி ஹங்மேன் பவன் திகார் சிறையை அடைந்துள்ளார். சிறை அதிகாரிகள் நாளை ஒத்திகை மரணதண்டனை நடத்த உள்ளனர்.

Next Story