கொரோனா அச்சம்: மும்பை ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது


கொரோனா அச்சம்: மும்பை ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது
x
தினத்தந்தி 17 March 2020 4:24 PM GMT (Updated: 17 March 2020 4:24 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மும்பை ஷீரடி சாய்பாபா கோவிலில் மதியம் 3 மணிக்கு நடைபெற்ற ஆரத்தி பூஜையுடன் கோவில் நடை அடைக்கப்பட்டது.

மும்பை, 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே முடக்கி போடும் வகையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று மாலை மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் மூடப்பட்ட நிலையில் உலக பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் இன்று மாலை 3 மணி அளவில்  நடை அடைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டனர். 

இதுகுறித்து ஷீரடி சாய்பாபா கோவில் செய்தி தொடர்பாளர் சுனில் தாம்பே கூறுகையில், ‘‘வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா கோவிலை மூடி உள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில் மூடப்பட்டு இருக்கும்’’ என்றார்.

Next Story