நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு


நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு
x
தினத்தந்தி 18 March 2020 8:14 AM GMT (Updated: 18 March 2020 8:14 AM GMT)

நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியில் பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.

புதுடெல்லி,

"யெஸ்" வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததை அடுத்து மார்ச் 5-ஆம் தேதி  தனது கட்டுப்பாட்டில் ரிசர்வ்  வங்கி கொண்டு வந்தது. ஏப்ரல்-3ஆம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.  

இந்நிலையில் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடு இன்று முதல் விலக்கப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story