‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை - மத்திய மந்திரி


‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை - மத்திய மந்திரி
x
தினத்தந்தி 18 March 2020 3:55 PM GMT (Updated: 18 March 2020 3:55 PM GMT)

‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

‘டிக்-டாக்’ செயலியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

குறிப்பாக பெண்களுக்கு டிக் - டாக் மோகம் அதிகமாக உள்ளது. இது, பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் கலாச்சார சீரழிவுக்கு காரணமாக இருப்பதாகவும் சமூக பொறுப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே, ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை வந்த வண்ணம்
உள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர் சுபாஷ் சர்க்கார் இது சம்பந்தமாக கேள்வி ஒன்றை
எழுப்பினார்.

அதில், ‘டிக்-டாக்’ செயலி தொடர்பாக அமெரிக்க உளவு நிறுவனத்திடம் இருந்து தகவல் ஒன்று வந்திருப்பதாகவும், அதில், ‘டிக்-டாக்’ செயலியால் மக்களிடம் எதிர்மறை விளைவுகள் உருவாகுவதாக குறிப்பிடப்பட்டு இருப்ப தாகவும் கூறப்படுகிறது.

எனவே, ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்கப்படுமா? என்று அவர் கேட்டு இருந்தார். இதற்கு மத்திய மந்திரி கிஷன் ரெட்டி பதில் அளித்தார். 

அவர் கூறும் போது, அமெரிக்காவில் இருந்து இது போன்ற எந்த அறிக்கையும் வரவில்லை. தற்போதைய நிலையில் ‘டிக்&டாக்’ செயலிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று அவர் கூறினார்.

Next Story