சேவல்களை கொடூரமாக கொல்வதை தடுத்து நிறுத்த உ.பி. அரசு உத்தரவு


சேவல்களை கொடூரமாக கொல்வதை தடுத்து நிறுத்த உ.பி. அரசு உத்தரவு
x
தினத்தந்தி 18 March 2020 8:19 PM GMT (Updated: 18 March 2020 8:19 PM GMT)

சேவல்களை கொடூரமாக கொல்வதை தடுத்து நிறுத்த உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் உள்ள கோழி பண்ணைகளில் சேவல்களை கொடூரமாக கொலை செய்வது அதிகரித்து வருகிறது. அவை முட்டை இடாது என்பதால், தீயில் எரித்தோ, தண்ணீரில் மூழ்கடித்தோ, அரவை எந்திரத்தில் அரைத்தோ கொடூரமாக கொன்று விடுகிறார்கள். இத்தகைய சட்டவிரோத கொடூர கொலைகளை தடுத்து நிறுத்துமாறு உத்தரபிரதேச மாநில அரசுக்கு மிருகவதை தடுப்பு அமைப்பான ‘பீட்டா’ கடிதம் எழுதியது.

அதை ஏற்றுக்கொண்டு, கோழி பண்ணைகளில் சேவல்களை கொடூரமாக கொல்வதை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட தலைமை கால்நடை அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் யு.பி.சிங் உத்தரவிட்டுள்ளார். விலங்குகள் நல வாரிய சிபாரிசின்படி, நைட்ரஜன் போன்ற வாயுக்களை செலுத்தி சாகடிக்குமாறு ‘பீட்டா’ வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story