அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: டுவிட்டர் மூலம் அமிதாப்பச்சன் விழிப்புணர்வு


அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: டுவிட்டர் மூலம் அமிதாப்பச்சன் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 March 2020 9:49 PM GMT (Updated: 18 March 2020 9:49 PM GMT)

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பாக, டுவிட்டர் மூலம் அமிதாப்பச்சன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

மும்பை,

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை பல்வேறு பிரபலங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் மூலம் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில்கூட கொரோனா குறித்த கவிதை ஒன்றையும், அதன் விளக்கத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வகையில், மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு மராட்டிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘வீட்டில் தனிமைப்படுத்துதல்’ என்ற முத்திரை (ஸ்டாம்ப்) ஒன்றையும் அரசு வெளியிட்டு உள்ளது.

இதை அமிதாப்பச்சனும் பெற்று உள்ளார். இதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் பகிர்ந்து இருந்தார். அதில், ‘எச்சரிக்கையாய் இருங்கள், நோய் தொற்று இருந்தால் தொடர்ந்து தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கி இருந்தன. அமிதாப்பச்சனின் இந்த நடவடிக்கைக்கு மராட்டிய அரசு பாராட்டு தெரிவித்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமிதாப்பச்சன் தனது வாராந்திர ரசிகர் சந்திப்பு கூட்டத்தை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story