தேசிய செய்திகள்

இத்தாலியில் இருந்து இந்தியர்கள் 263 பேர் டெல்லி திரும்பினர்; கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர் + "||" + 263 Indians returned to India from Italy; They were sent to the observation camp

இத்தாலியில் இருந்து இந்தியர்கள் 263 பேர் டெல்லி திரும்பினர்; கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

இத்தாலியில் இருந்து இந்தியர்கள் 263 பேர் டெல்லி திரும்பினர்; கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்
இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய இந்தியர்கள் 263 பேர், கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
புதுடெல்லி, 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இத்தாலியை நிர்மூலமாக்கி வருகிறது. உலக அளவில் அதிக உயிரிழப்புகள் தினந்தோறும் அந்த நாட்டில் நிகழ்ந்து வருகிறது.

இவ்வாறு பெரும் பீதி நிலவி வரும் இத்தாலியில் ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இதில் 215 பேர் கடந்த 15-ந்தேதி டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அங்குள்ள சிறப்பு முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 263 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து தென்மேற்கு டெல்லியில் உள்ள இந்தோ-திபெத் படையினரின் கண்காணிப்பு முகாமில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு ஏற்கனவே சீனாவின் உகானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
2. இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
3. கொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
4. இத்தாலியில் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்த 101 வயது முதியவர்
இத்தாலியில் 101 வயதான முதியவர் ஒருவர், கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
5. இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.